நேசிக்க “காரணங்கள் தேவையில்லை” – அருள் செல்வம் இயக்கத்தில் மற்றுமொரு பாடல்

363

காதலின் அழகைப் பேசும் மற்றுமொரு பாடலை ஜில்லென்ற பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தல மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் காட்சிப்படுத்தியிருக்கின்றார் இயக்குனர் அருள் செல்வம்.

பாடலின் ஒளிப்பதிவாளரும், படத்தொகுப்பாளரும் அவரே என்பதால் இன்னும் அனுபவித்து “காரணங்கள் தேவையில்லை” பாடலை ஹப்புத்தலயின் குளிர்மைக்கு சற்றும் சளைக்காமல் எடுத்திருக்கின்றார்.

ஹஸிதன் விஷ்வா மற்றும் கீர்த்தனா குணாளன் ஆகியோர் பாடியிருக்கும் இந்தப் பாடலுக்கான இசை ஷகிஸ்னா சேவியர். பாடல் வரிகள் கீர்த்தனா மற்றும் ஷகிஸ்னா.

MR. CHOCO BOI, CHRISTINA GRACE, HASSITHAN VISHVAA, KEERTHANA VISHVANATHAN ஆகியோர் பாடலில் தோன்றி நடித்திருக்கின்றார்கள்.