தேன் குழலும் கரம் சுண்டலும் “திருப்பன்” பாடல் – இது யாழ்ப்பாண ஸ்பெஷல்!

396

ரவி ரோய்ஸ்டர் இசையிலும் குரலிலும் வெளிவந்துள்ள புதிய பாடல் “திருப்பன்”.

தமிழ் மற்றும் சிங்கள மொழிகளின் இணைவில் உருவாகியிருக்கும் இந்தப் பாடலில் ராப் வரிகளை எழுதிப் பாடியுள்ளார் ரத்யா.

யாழ்ப்பாணத்தின் சில “ஸ்பெஷல்” ஆன விடயங்களை பாடலில் உள்ளடக்கி ரசிக்கும் படி செய்திருக்கின்றனர் குழுவினர்.

குறிப்பாக ரத்யாவின் கீழ் உள்ள வரிகள் அட்டகாசமாக உள்ளன.

யாழின் தமிழின் அழகு நீயும் கொஞ்சம் வந்து பழகு
வீர மண்ணின் பெண்கள் வரவே நீயும் சற்று விலகு
எழிலும் பொங்கும் அழகு எளிமை வாழ்க்கை இங்கு பழகு
நீ இதை விரும்பிட ஒரு நொடி போதும் நண்பனே!

பனங்கிழங்கு பிடிக்கும் உனக்கு
பனையின் நொங்கு பிடிக்கும் உனக்கு
பனையின் கள்ளு பிடிக்கும் உனக்கு
பனையின் பழமும் பிடிக்கும் உனக்கு

தேன் குழலும் பிடிக்கும் உனக்கு
கரம் சுண்டல் பிடிக்கும் உனக்கு
பருத்தித்துறையின் வடையின் ருசியும்
திரும்பத் திரும்ப திரும்பத் திரும்ப..

Song – Thiruppan
Produced by Ravi Royster
Lyrics by Kusala Vidanapathirana
Rap lyrics by @Rathya
Mixed & Mastered by @Dimi3 @Audiola
Title by Kusal Sri
Lyric video Animation by Chanaka Sandaruwan Jayasekara @ Digitree Animation