சொந்த ஊரின் பெருமை பேசும் கோகுலனின் “எங்கட ஊர்” பாடல்

455

இசைப்பிரியனின் இசையில் கவிப்புலவர் வேலணையூர் சுரேஸ் இன் வரிகளில் ஈழத்தின் புகழ் பூத்த பாடகர் அமரர் சாந்தனின் மகன் கோகுலனுடைய குரலில் வெளிவந்துள்ள பாடல் “எங்கட ஊர்”.

பிறந்த ஊரை விட்டுப் பிரிந்து வெளிநாடு சென்ற ஒருவர், தன் ஊர் பற்றிய ஞாபகங்களை மீட்டிப்பார்க்கும் ஒரு பாடலாக மண் வாசனையுடன் இந்தப் பாடலைத் தந்திருக்கின்றது பாடல் குழு.

பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் பல கதைகள் பேசுகின்றன. அதன் சுவை குறையாத வகையில் காட்சிப்படுத்தியிருக்கின்றார்கள். ஏ.கே.கமலின் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்தப் பாடலை கோகுலனே இயக்கியிருப்பது சிறப்பு. படத்தொகுப்பை ஏ.எஸ்.பிரசாத்தும், கணணி வரைகலையை ஹம்ஷத்வனனும் செய்திருக்கின்றார்கள்.

கிரிஸ்ரியனின் (மதி) நடன வடிவமைப்பில் உருவான இந்தப் பாடலுக்கு கோகுலன் சாந்தன் மற்றும் பல நடனக்கலைஞர்கள் நடித்துள்ளனர். குறிப்பாக பல குழந்தை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அவர்களின் நடிப்பு இயல்பாகவும் அட்டகாசமாகவும் இருக்கின்றது.

Music Composer & Arrangements – Isaipiriyan
Vocals : Kokulan Santhan
Lyrics -kavipulavar Velanaiyoor Suresh
Recording Studios – Siva Pathmayan (Ten Studios)

Written & Directed by – Kokulan Santhan
Associate Director – Suvikaran MSK
Art direction – A.R.pirathep
Director of Photography – A.K.Kamalathasan (AK KAMAL PHOTOGRAPHY)
Producer – Pirabakaran Santhalingam
Assistant Producer – S.G.S Creation
Editor – A.S.Prashanth
Choreography – Christian(Mathi)