“அவளதிகாரம்” பாடலின் முதற்பார்வையை வெளியிட்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!

287

குறிஞ்சி கிரியேஷன்ஸ் மற்றும் தமிழ் கிரியேட்டர்ஸ் பெருமையுடன் வழங்கும் “அவளதிகாரம்” பாடலின் முதற்பார்வை அண்மையில் வெளியிடப்பட்டது.

பத்மயன் சிவாவின் இசையில் உருவாகியுள்ள இந்தப் பாடலுக்கான வரிகளை வட்ஸூ எழுதியுள்ளார்.

திலக் மற்றும் கௌசி ராஜ் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் பாடலை கதிர் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு வட்ஸூ, படத்தொகுப்பு கதிர்.

இந்தப் பாடலின் முதற்பார்வையை அண்மையில், தென்னிந்திய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.