சந்தைக்குச் சென்ற யுவதியை மீனாக மாற்றிய இளைஞர்கள் – “அயிலை” பாடல்

428

நுங்குநாடு TV வெளியீடாக UK மாலா குமார் படைப்பகம் தயாரிப்பில் அண்மையில் வெளிவந்துள்ள பாடல் “அயிலை”.

ரிவின் பிரசாத் இசையமைத்துள்ள இந்தப் பாடலுக்கான வரிகளை தினேஷ் ஏகாம்பரம் எழுதியுள்ளதுடன், கஜீபன் செல்வம் பாடியுள்ளார்.

“காக்கைதீவு மீன் சந்தையில கணவாய் வாங்க வந்தவளே..” என ஆரம்பிக்கும் இப்பாடல் இலங்கையின் புகழ்பெற்ற இசை வடிவமான பைலா பாடல் வகையில் அமைந்துள்ளது.

காணொளியாக வெளியாகியுள்ள இந்தப் பாடலுக்கு திரைக்கதை அமைத்து நடன இயக்கத்தையும் செய்துள்ளார் கண்ணா உதய். பாடலுக்கான ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு ரெஜி செல்வராசா.

மீன் வாங்க சந்தைக்குச் சென்ற யுவதியையே மீனாக வர்ணித்து இலங்கையில் கிடைக்கக்கூடிய மீன் வகைகளை எல்லாம் உள்ளடக்கி அட்டகாசமாக பாடலை எழுதியுள்ளார் தினேஸ் ஏகாம்பரம். பாடலில் ஊரெழு பகி மற்றும் ருவித்தா உதயகுமார் ஆகியோர் ஆகியோர் பிரதான பாத்திரங்களாக நடித்துள்ளனர்.

Producer: UK Mala Kumar
Production Executive : Kajeepan Selvam

Cast : Urelu Bahi | Ruviththa Uthayakumar | Kiswin

Music : Rwin Pirasath
Singer : Kajeepan Selvam
Lyrics : Thenesh Ekambharam
Chorus : Thenesh Ekambharam & Rwin Prasanth

Bass Guitar : Rageswaran Ramalingam
Mix & Master : Rwin Pirasath

Camera & Edit : Reji Selvarasa
Ass. Camera Man : Gopi

Concept & Choreography : Kanna Uthay
Dancers : V.V. Rostan, A.J.Nithan, Doringdan, N.Vithusan, T.Kanistan, J.Suman, A.Anistan