பெரிதும் எதிர்பார்க்கப்படும் “நந்திக்குவேனி” டீசர் வெளியீடு

863

பூவரசி மீடியா தயாரிப்பில் வெளியாகவுள்ள குறும்படம் “நந்திக்குவேனி”. இதில், நவயுகா, விதுஷான், சுகிர்தன், ஷாஷா ஷெரீன், கீர்த்தி, திருமலை பிரணவன், வினித், நஜோமி, ஷஜந்தி, அருண் ராஜ், ஜசோதரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஈழவாணி இயக்கியுள்ள இப்படத்திற்கு ரெஜி செல்வராசா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜெயந்தன் விக்கி இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை அலெக்ஸ் கோபியும், ஒப்பனையை அன்ட்ரூ ஜூலியஸூம் நடன இயக்கத்தை வாகீசனும் மேற்கொண்டுள்ளனர்.

பூவரசி மீடியாவுடன் கமலசீலன் இணைந்து தயாரித்திருக்கும் இக்குறும்படத்தில் 3ஏ ஸ்ரூடியோ மற்றும் வி.திலீபனும் கைகோர்த்திருக்கின்றார்கள்.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இக்குறும்படத்தின் டீசர் அண்மையில் வெளியிடப்பட்டு இணையத்தில் பலத்த வரவேற்பைப் பெற்று வருகின்றது. பல கலைஞர்களின் கடுமையான உழைப்பில் இப்படம் தயாராகியுள்ளது என்பது, அதன் டீசரைப் பார்க்கும் போது புரிகிறது.

படம் குறித்து அதன் இயக்குனர் ஈழவாணி அண்மையில் இவ்வாறு பகிர்ந்துள்ளார்.

”நந்திக்குவேனி என்பது வைக்க முடியாத ஒரு பெயர் அல்லது வைக்கக்கூடாத ஒரு பெயர். இப்படி பல சர்ச்சைகளோடும் குழப்பங்களோடும் நிறைவடைகிறது அல்லது தொடர்கிறது குவேனியின் கதை, அல்லது எங்கட கதை.

இந்த நந்திக்குவேனியில் பலர் இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள், ஒவ்வொருத்தருமே படைப்பு சிறப்பாக வரவேண்டும் என்ற நோக்கத்திலேயே பணியாற்றியிருந்தார்கள். அதன் வெளிப்பாடே நந்திக்குவேனி சிறப்பாக வெளிவரவிருக்குறது. இதில் கடமையாற்றியிருக்கிற அனைத்து தொழிநுட்பக் கலைஞர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களைப் பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி.

இந்த வரலாற்றுச்சிதைவு படத்தை தயாரிக்க, தயாரிப்பு பணிகளில் நாங்களும் கைகொடுக்கிறோம் என இணைந்து கொண்ட கமலசீலன் அவர்களுக்கு மிக்க நன்றி. மேலும் தேவையான லென்ஸ் லைற்றிங் போன்றவற்றை வழங்கி தயாரிப்பில் இணைந்து கொண்ட தெய்வீகம் அண்ணன் 3A Studio க்கும், திலீபன் அவர்களுக்கும் மிக்க நன்றிகள். இன்னும் ஊடக அணுசரனைகள் வழங்கிக்கொண்டிருக்கும் தமிழ்க்குரல், குவியம் போன்றவற்றிற்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.