திரை உருவாக்கத்திற்கு களப்பணியின் அறிவு மிக முக்கியமானது – விமலின் படத்தில் உதவி இயக்குனராக உள்ள ஜெனோசன் தெரிவிப்பு!

317

‘உதய் புரோடக்சன்ஸ்’ மற்றும் ‘மேஜிக் டச் பிச்சர்ஸ்’ தயாரிப்பில் நடிகர் விமல் நடிக்கும் புதிய திரைப்படத்தில் இலங்கையை சேர்ந்த ஜெனோசன் ராஜேஸ்வர் உதவி இயக்குனராக பணியாற்றுகின்றார்.

இயக்குனர் மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கத்தில் நடிகர் விமல் நடிக்கும் புதிய படம் உருவாகி கொண்டிருக்கிறது. குடும்ப உறவுகளையும் மையமாக வைத்து உருவாகியுள்ள புதிய படத்தில் நடிகர் விமல் கதாநாயகனாக நடிக்க இப்படத்தில் பாண்டியராஜன் விமலின் தந்தையாக நடிக்கிறார். சகோதரியாக அனிதா சம்பத் நடிக்கிறார். தன் தங்கைக்கு திருமணம் செய்து வைக்க போராடும் ஒரு அண்ணனின் வாழ்வை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் விமல், அனிதா சம்பத், பாண்டியராஜன், வத்சன் வீரமணி, ஆடுகளம் நரேன், பாலசரவணன், தீபா, நேகா ஜா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இத்திரைப்படம் அலெக்ஸ் அவர்களின் ஒளிப்பதிவிலும் டேவின் அவர்களின் இணை இயக்கத்திலும், மணிகண்டன் இவர்களின் துணை இயக்கத்திலும் உதவி இயக்குனர்களாக அஸ்வின், எட்வின், பிரவீன், உமர் மற்றும் இவர்களுடன் இலங்கை கலைஞன் ஜெனோசனும் பணிபுரிகின்றார்.

குறிஞ்சி கிறியேசன்ஸ் தயாரிப்பு நிறுவனம் ஊடாக தயாரிப்பாளர், மக்கள் தொடர்பாளர், தயாரிப்பு நிர்வாகி என பல துறைகளில் பணியாற்றிய இவரது இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன் “இறகெனும் நினைவுகள்“ எனும் கவிதைப்பாடல் தென்னிந்தியாவின் விகடன் சினிமா யூடியுப் தளத்தில் வெளியாகி பாராட்டுக்களையும், அங்கீகாரத்தையும் பெற்றிருந்தது.

இந்நிலையில் மீண்டும் உதவி இயக்குனராக ஒரு முழுநீளத்திரைப்படத்தில் பணியாற்றும் எண்ணம் இருப்பதனாலும் சினிமாவின் உருவாக்கித்திறனுக்கு படப்பிடிப்பு சார்ந்த அறிவு இன்னும் திறம்பட செயற்படும் என்பதனாலும் தற்போது பெயரிடப்படாத நடிகர் விமலின் இந்த திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிகின்றார்.

ஒரு திரை உருவாக்கத்திற்கு களப்பணியின் அறிவு மிக முக்கியமானது. அதுவும் இலங்கையில் வர்த்தகரீதியான சினிமா உருவாக்கத்திற்கு சினிமாவை திறம்பட உருவாக்கினால் மட்டுமே சாத்தியாமாகும் எனவும் இலங்கை தமிழ் சினிமாவில் வருடத்திற்கு சரியாக சொல்ல முடியாத அளவிற்கு திரைப்படங்கள் உருவாக்கப்படுவதில்லை எனவும் ஜெனோசன் கூறிகின்றார்.

குறும்படங்கள், பாடல்கள் என்பவற்றை தாண்டி முழுநீளத்திரைப்படம் என்பது ஒரு சினிமா கலைஞனின் மாபெரும் கனவு அதை நோக்கி பயணிப்பதற்கான படிகளே இவை என்றும் குறிப்பிடுகின்றார்.