வெளியாகும் முன்பே பல்வேறு விருதுகளைக் குவித்த ஈழத்தின் “வெந்து தணிந்தது காடு” படத்தின் முதற்பார்வை வெளியீடு

443

ஈழத்து இயக்குனர் மதிசுதாவின் இயக்கத்தில் உருவாகி, பல்வேறு சர்வதேச விருதுகளை வென்ற ”வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தின் முதற்பார்வை வெளியிடப்பட்டிருக்கின்றது. இந்த Poster ஆனது “உருவட்டி“ விருது விழாவில் சிறந்த வடிவமைப்புக்கான விருதைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும், வெளியீட்டுக்கு முன்பே இத்திரைப்படம் பெற்றுக் கொண்ட விருதுகள் பட்டியலை இயக்குனர் மதிசுதா, தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விருது விபரம் –

அடிக்கடி விருது கிடைத்துள்ளது என்ற வாசகத்தை சேர்த்து தங்களை தொந்தரவு செய்யாமால் ஒரே பாய்ச்சலாக கடந்த 3 வாரமாக திரைப்படம் பெற்றுக் கொண்ட விருதுகளைப் பட்டியல் இடுகின்றேன்.

இவ்விருதுகளை உறுதிப்படுத்த அந்த விருதுகளை நடத்துபவரின் பெயர்களை கூகுலில் இடுவதன் மூலம் அவர்களது இணையத்தளத்திலோ அல்லது பேஸ்புக் பக்கத்திலோ பார்வையிடுவதுடன். எமது திரைப்படத்துடன் போட்டி இட்ட ஏனைய திரைப்பட விபரங்களையும் பெற்றுக் கொள்ளலாம்.

1) Birsamunda International Film Festival இல்
Honorable Mention For Best All catagery
2) கேரளாவில் இடம்பெறும் Cuckoo International Film Festival இல்
Honorable Mention For Best All catagery
3) Golden Leaf International Film Festival இல்
Best Writer
Best Producer
4) Hodu International film festival இல்
Best Debut Film
Special Jury Award for Best International Feature Film
5) Marudham Indie Film Festival இல்
Best Asian Film
6) Madras Independent Film Festival இல்
Special Mention

இதுவரை 10 சர்வதேச விருது விழாக்களில் 18 விருதுகளை ”வெந்து தணிந்தது காடு” திரைப்படம் பெற்றிருக்கின்றது.

என்னை நம்பி இப்படைப்புக்கு பணமிட்ட 160 பேருக்கும், எங்கட கதைகளைச் சொல்ல வைப்பதற்காக என்னை உயிருடன் தப்ப வைத்த இயற்கைக்கும். என்னையும் என் படைப்புக்களையும் அங்கீகரிக்கும் ஒவ்வொருவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

இத்திரைப்படம் எல்லோரையும் சென்றடைய விளம்பர விடயத்தில் தங்களால் முடிந்த ஒத்துழைப்பை எதிர்பார்த்து நிற்கின்றேன்.

குறிப்பு – இது மக்களின் கதை என்பதால் அவர்களுக்கு சொந்தமான திரைப்படமாகும் அதனால் இதன் சுவர்ப்படத்தை பணமிட்ட 160 பேருடன் மக்கள் தான் வெளியிட இருக்கின்றார்கள். (வெளியிட்டார்கள்)