இலங்கை – இந்திய தயாரிப்பான “அடங்காமை” எதிர்வரும் 28 முதல் இலங்கைத் திரையரங்குகளில்

750

அடங்காமை எனும் முழு நீளத்திரைப்படம் வரும் 28ம் திகதி முதல் இலங்கையில் பல மாவட்டங்களில் பல திரையரங்குகளில் வெளியாகவிருக்கன்றது.

இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்களான மைக்கேல் ஜான்சன் மற்றும் பொன் புலேந்திரன் ஆகியோரும் கதாநாயகனாக நடித்திருக்கும் சரோன் என்பவரும் இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள்.

திரைப்பட இயக்குனர் கோபால் மற்ற தொழிநுட்ப கலைஞர்கள் அனைவரும் தென்னிந்தியாவை சேர்ந்தவர்களே.

என்னதான் தென்னிந்திய உருவாக்கமாக இருந்தாலும் இலங்கை தமிழர்களின் பங்களிப்பு என்பது உலகின் அனைத்து பாகங்களிலும் உள்ள சினிமாக்களில் அதிகூடிய பங்களிப்பு எனலாம். அந்தவகையில் ஒரு முக்கிய திருப்புமைனையாக இத்திரைப்படம் மாறுவதற்கான சந்தர்ப்பம் உள்ளது.

இத்திரைப்படமானது அண்மையில் தமிழ்நாட்டில் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகி சிறப்பான வரவேற்பு கிடைத்தை அடுத்து இலங்கையில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள திரையரங்குகளில் திரைப்படம் வெளியாகவிருக்கன்றது.

சிறுவயது நண்பர்கள் மூவர் வளர்ந்த பின் அவரவர் வாழ்வும் நட்பின் பிணைப்பும் எவ்வாறு நகர்கின்றது என்பதே திரைப்படத்தின் கருப்பொருளாகும்.

இத்திரைப்படத்தில் இலங்கையில் இருந்து ஒரு பாடலை ஈழத்து இயக்குனர் ஜெனோசன் ராஜேஸ்வர் இயக்கியிருப்பது சிறப்பம்சமாகிறது. ஈச்சங்காட்டு பக்கம் நீயும் வாறியா…! எனும் கலகலப்பான பாடலை இங்கே குகன் ஆருஷ் மற்றும் தமிழ்நிலா போன்ற கலைஞர்களை வைத்து இவர் இயக்கியிருக்கிற்றார்.