ஷானுவின் இசையில் ஆட்டம் போட செய்யும் ‘சமையல்காரன்’ பாடல்

397

துஷிகரன் மற்றும் வாகீசனின் கூட்டு இயக்கத்தில் ரெக்சன் மற்றும் தமிழ் நிலாவின் கலக்கல் நடனத்தில் வெளியாகியிருக்கும் பாடல் “சமையல்காரன்”.

வி.ஷானுவின் இசையில் உருவான இந்தப் பாடலை ரகீப் சுப்ரமணியம் பாடியுள்ளார். பாடலுக்கான வரிகள் தீபன். இசைக்கலவை ரூபன்.

ரெக்சன் மற்றும் தமிழ் நிலாவுடன் இணைந்து ரொபேட், மொரிஸ் துஷ்யந்தன் மற்றும் T. SUKIRTHAN K. ANISDAN J. SUMAN GK. KIRU I. MURASOLIMARAN S. JENIFER SHARA R. EVANJALIN S. VITHURSIKA S. SHARMINI P. VAISHNAVI ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் பாடலுக்கான ஒளிப்பதிவை வட்சுவும் படத்தொகுப்பை டிலீப் லோகநாதனும் செய்துள்ளனர். ஒப்பனை அகல்.

தமிழ் கிரியேட்டர்ஸ் வெளியீடாக வந்துள்ள இப்பாடலை ரகீப் சுப்ரமணியத்துடன் இணைந்து கே.தீபன் தயாரித்துள்ளார்.