அட! போட வைக்கும் அழகிய பாடல் லதீப்பின் “பூக்களைப் போன்றவள்”

275

காதலர் தினத்தினை முன்னிட்டு வெளிவந்த நம்மவர் பாடல்களில் முத்தாய்ப்பாய் அமைந்திருக்கின்றது லதீப்பின் “பூக்களைப் போன்றவள்”.

ஏ.ஆர்.சி. மொபைல் புரொடக்சன் சார்பில் விஜிதரன் பொன்னுத்துறை தயாரிப்பில் உருவான இந்தப் பாடலுக்கான இசையினை சுஜீதன் அமைத்திருக்கின்றார். லதீப் பாலசுப்ரமணியத்தின் (பிரான்ஸ்) வரிகளில் உருவான இந்தப் பாடலை தென்னிந்திய பின்னணிப் பாடகர் சத்யபிரகாஷ் பாடியுள்ளார்.

காணொளிப்பாடலாக வெளிவந்த இந்தப் பாடலை ஈழத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கதிர் இயக்கியுள்ளார். பாடலின் படத்தொகுப்பாளரும் அவரே! தனது கமெரா கண்கள் மூலம் அசத்தல் படைப்புக்கள் பலதை தந்த வட்ஸூ இதன் ஒளிப்பதிவைக் கவனித்திருக்கின்றார்.

ஊரெழு பகி ருவுத்தா ஆகியோர் பிரதான பாத்திரங்களாக நடித்துள்ள இந்தப் பாடலுக்கு வைபிரேட் டான்ஸ் க்றூப் சார்பில் ஊரெழு பகியே நடனம் அமைத்திருக்கின்றார்.

பாடலின் டைட்டிலுடன் ஆரம்பிக்கின்ற மலையகத்தின் குளுமை பாடல் முழுவதிலும் தொடர்கின்றது. அதனை அருமையாகக் காட்சிப்படுத்தியிருக்கின்றார் ஒளிப்பதிவாளர். நாயகன் – நாயகியின் நடிப்பு, நடனம் என அனைத்தும் அட்டகாசம். பூக்களைப் போன்று மென்மையாகத் தான் பாடலும் நகருகின்றது. அந்த மென்மைக்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில் பாடலின் வரிகளும் இசையும் அமைந்திருக்கின்றன.

PRODUCED BY:VIJITHARAN PONNUTHURAI (ARC MOBILE PRODUCTION)
LYRICS BY:- LATHEEP BALASUBRAMANIAM
SINGER:- SATHYA PRAKASH
MUSIC BY:-SUJEETHAN VY
FLUTE:- NATARAJ
MIXED and MASTERD BY:- G.SAYEETHARSAN
(SAIMADHURAM STUDIO)
STORY BY :- ASFILMSTYLE SUBAS
DIRECTED and
EDITING BY:- KATHIR
DOP: WATSU
CHOREOGRAPHER: URELU BAKI ( VIBRATE DANCE GROUP)
STARRING :- URELU BAKI, RUVITHTHA
ASS DIRECTOR:- KAJEEPAN
ASS CAMARAMAN :- SUTHA
MAU :- RUVITHTHA BEAUTY SALOON
BACKGROUND DANCERS:- KANI , SUMAN
PROJECT CORDINATOR :- GOVI SUN