இணையத் துன்புறுத்தல்களை வெளிப்படுத்தும் நவயுகாவின் “பெட்டை கோழி கூவி..” ஆவணப்படம்

328

இணையம் மூலமான துன்புறுத்தல்கள் குறிப்பாக சமூக வலைத்தளங்கள் மூலமாக பெண்களுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்களை மையப்படுத்தி நவயுகா குகராஜா இயக்கியுள்ள ஆவணக் குறும்படம் “பெட்டை கோழி கூவி..”.

இதில் ஐஸ்வர்யா மற்றும் பூர்விகா ஆகியோர் நடித்துள்ளனர். இணையத் துன்புறுத்தலுக்கு ஆளான நடிகை பூர்விகாவையே இந்த ஆவணப்படத்தில் நடிக்க வைத்திருப்பது இயக்குனரின் சாமர்த்தியம்.

மாதுனி அழகக்கோன் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு எம்.சி.ராஜ் இசையமைத்துள்ளார். ஜோஷூவா ஹெபி படத்தொகுப்பையும் கோபி ரமணன் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர். த்ரீ புரொடக்சன்ஸ் சார்பில் நடிகை நவயுகாவே இதனைத் தயாரித்தும் உள்ளார்.

இந்த ஆவணக்குறும்படத்தில் ஒளிப்பதிவாளராக பணி புரிந்த மாதுனி அழகக்கோனுக்கு அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற அஜென்டா 14 குறும்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.