மத நல்லிணக்கத்தைப் பேசும் கோடீஸ்வரனின் “இருளகல்வு” விழிப்புணர்வுக் குறும்படம்

187

ஏ.எம்.இம்ரானின் கதையில் ஈழத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கோடீஸ்வரனின் திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தில் “லிப்ட்” தயாரித்திருக்கும் விழிப்புணர்வுக் குறும்படம் “இருளகல்வு”.

சமூகத்திற்கு மிகவும் தேவையான மத நல்லிணக்கம் குறித்து இந்தக் குறும்படம் பேசியிருக்கின்றது. அதுவும் மூவின மக்களும் வாழக்கூடிய கிழக்கிலங்கையில் இருந்து இந்தப்படம் வந்திருப்பது சிறப்பு.

இதில் நேசதுரை சிவாநிதி, வைத்திலிங்கம் லவன்ராஜ், கே.எல்.கமரதீன், மகேந்திரராஜா தீக்ஷனன், பாஸ்கரன் ஹனுஷ்யா, கிருபராசா ருபாஸ்கரன் மற்றும் ஜெரோம் குலேந்திரன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள்.

இருளகல்வு குறும்படத்திற்கான ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பை எஸ்.என்.விஷ்ணுஜன் மேற்கொண்டிருப்பதுடன், கௌரிகாந்தன் வித்யாருண்யன் இசையமைத்துள்ளார். உதவி இயக்குனராக அருமைதுரை டனோஸ் பணியாற்றியிருக்கிறார்.

UNFPA மற்றும் ADT நிறுவனங்களின் நிதி அனுசரணையில் Lift Ngo நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் “சமூக சகவாழ்வும் சமாதானத்தைக் கட்டியெழுப்புதலும்” எனும் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக LIFT MEDIA UNIT இனால் இந்த விழிப்புணர்வுக் குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.