“சொல்லாம வெடிச்ச காஸூ போல..” – ட்ரெண்டிங் வரிகளுடன் சி.வி.யின் “போடி” பாடல்

250

தமிழா தயாரிப்பாக சொல்லிசைப் பாடகர் சி.வி.லக்ஸ் இன் இசை மற்றும் வரிகளில் உருவான “போடி” பாடல் வெளியாகியுள்ளது.

காணொளிப்பாடலாக வெளியாகியுள்ள இந்தப்பாடலை அகிலன் இயக்கியுள்ளார். படத்தொகுப்பு பணிகளையும் அவரே மேற்கொண்டுள்ளார். ஒளிப்பதிவு தர்ஷான் ஜனா.

சி.வி.லக்ஸ் மற்றும் சிவா ஷெசின் ஆகியோர் நடித்துள்ள இந்தப்பாடலையும் சி.வி.லக்ஸே பாடியுள்ளார். இது ஒரு காதல் பிரிவு பாடல் என்றாலும் தற்காலத்துக்கு பொருந்தக்கூடிய வரிகளுடன் அமைந்துள்ளது.

அண்மையில் சமையல் எரிவாயு அடுப்புடன் தொடர்புடைய வெடிப்பு சம்பவங்கள் பல பதிவாகியிருந்த நிலையில், “சொல்லாம வெடிச்ச காஸூ போல சிதறிப் போனேன் தூள் தூளாக..” என காதலியின் நிராகரிப்பை வலி மிகுந்த வரிகளாக்கியுள்ளார்.

Directed and Edited By Ahilan
Cinematography – Thaarshan Jena
Music ,Vocals, Lyrics – Cv laksh
Mixed and Mastered – Thinesh NA
Additional Music Works – Bonifus
Cast – Cv laksh & Siva Sesin
Makeup Artist – S.Sulakshana