மகளிர் தினத்தில் பெண்களுக்காய் ஒரு பாடல் “முகம்” – எழுந்து வா!

835

FabDb Records இன் தயாரிப்பில் படைப்பாளிகள் உலகம் வெளியீடாக சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வெளிவந்திருக்கும் பாடல் “முகம்” – எழுந்து வா.

ஜொனாவின் இசையில் உருவான இந்தப் பாடலுக்கான வரிகளை எழுதி பாடியுள்ளார் ஆரணி.

ஆரணி, சௌமி, அகீரா ஆகியோர் நடித்திருக்கும் இந்தப்பாடலுக்கான ஒளிப்பதிவை வட்ஸூவும், படத்தொகுப்பை பிரியந்தனும் மேற்கொண்டுள்ளனர். காந்தரூபனின் கலை இயக்கத்துடன் பாடலை சிறப்பாக இயக்கியிருக்கின்றார் நிவேதிகன்.

பெண்கள் மீதான அடக்குமுறைகளை வெவ்வேறு வயதுப்படிநிலைகளில் சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளனர். அடக்குமுறைகளை தகர்த்தெறிந்து “எழுந்து வா” என உரமூட்டும் வரிகளுடன் அசத்தலாக பாடலை பாடியிருக்கின்றார் ஆரணி. பாடல் குழுவினரின் புத்தாக்க சிந்தனைகள் பாடல் படமாக்கப்பட்ட விதத்தில் நன்றாக தெரிகின்றது.

Vocal & Lyric by Aarani
Composed & Music Produced by Jonah
Starring – Aarani | Showmi | Ageera
Directed by Nive Nivethigan Vj
DOP & Costume – Watsu Hathor
Ass. Cameraman – S.Nilujan
Art Direction – Kantharuban
Edit & Colour – G.Piriyanthan