“நெடுநீரறிவு” – ஆர்.ஜே.நெலுவின் விழிப்புணர்வுக் குறும்படம்

520

நடிகராக பரவலாக அறியப்பட்ட ஆர்.ஜே.நெலுவின் கதை, திரைக்கதை, வசனம், படத்தொகுப்பு மற்றும் இயக்கத்தில் உருவான “நெடுநீரறிவு” குறும்படம் அண்மையில் வெளியிடப்பட்டது.

இந்தப் படத்திற்கான ஒளிப்பதிவை அலெக்ஸ் கோபி மேற்கொண்டுள்ளதுடன், பத்மயன் சிவா இசையமைத்துள்ளார்.

வேட்டையன் இம்ரான், கிருஷ்ணபிள்ளை கண்ணதாசன், முரளிதரன் முரளி, லோஜிதா சிவநேசன், ஆறுமுகம் அனுஜா, குமாரவேல் அனுஜா, சந்திரவதி குமாரவேல் மற்றும் கதிர்காமதம்பி மகேந்திரன் ஆகியோர் இக்குறும்படத்தில் நடித்துள்ளனர்.

தாயை இழந்து தந்தையாருடன் வாழும் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண் (மாணவி) அன்புக்காக ஏங்கித் தவிப்பதும், பின்னர் அந்த அன்பையே ஆயுதமாகப் பாவித்து அப்பெண்ணை பாலியல் ரீதியில் இளைஞன் ஒருவன் துன்புறுத்துவதும் என படம் நகர்கின்றது.

இந்த விழிப்புணர்வுக் குறும்படம், UNFPA மற்றும் ADT நிறுவனங்களின் நிதி அனுசரணையில் LIFT நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் “பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம்” எனும் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக LIFT MEDIA UNIT இனால் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.