தியேட்டர்களை திணறடிக்க வருகின்றான் “ரிச்சாட்”

506

Bad-Dot Studios (Pvt) Ltd & RNP Entertainment தயாரிப்பில் பிரேமலக்ஷன் இயக்கத்தில் உருவான “ரிச்சாட்” திரைப்படம் எதிர்வரும் 24 ஆம் திகதி மட்டக்களப்பில் திரையிடப்படவுள்ளது.

அதற்கமைய மட்டக்களப்பு சாந்தி திரையரங்கில் மாலை 05.15 மற்றும் 06.45 மணிக்காட்சிகளும் செல்லம் செங்கலடி திரையரங்கில் மாலை 06.15 காட்சியும் காட்டப்படவுள்ளது.

இதற்கான டிக்கெட்டுக்களை நாளை (11/03/2022) மாலையிலிருந்து பின்வரும் இடங்களில் பெற்றுக்கொள்ளலாம் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

ODC – 199/= Balcony – 299/=

  • Tic Tac Entertainment, Arasady
  • All In One , 79D Kumarathan Kovil Rd, Batticaloa
  • Teneciy 20 Studio, 09 Pioneer Rd, Batticaloa
  • Reye Communication, Arayampathy.
    மேலதிக தொடர்புகளுக்கு – 0767633703

“ரிச்சாட்” திரைப்படத்தில் எஸ்.என்.விஷ்ணுஜன், சத்யா விக்டர், கோடீஸ்வரன், ரியூடர், விஜி, கிரேஷன் பிரசாத், சுந்தர், ரட்ணம் செல்வா, டிலுஷான், சாகேஷ், இராவணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப்படத்திற்கான கதை மற்றும் திரைக்கதையை ஜேகப் எல் ஜெரோஷன் மற்றும் நண்பன் லோஜி ஆகியோர் எழுதியுள்ளனர். மிது ஒளிப்பதிவைக் கவனித்துள்ளதுடன், சஞ்ஜித் லக்ஷ்மன் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு செய்து, இயக்கியுள்ளார் பிரேமலுக்ஷன்.

இந்தப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகியிருந்தது. அதனைப் பார்க்கும் போதே, பரபரப்புக்கு பஞ்சமில்லா ஒரு த்ரில் அனுபவத்தை படத்தில் பெறலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ரிச்சாட் படம் வெற்றி பெற குவியத்தின் வாழ்த்துக்கள்.