நாளை வெளியாகின்றது ஷமீலின் ‘தீரா காதல்’ பாடல்

299

இசையமைப்பாளர் ஷமீலின் இசை மற்றும் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள ‘தீரா காதல்’ காணொளிப்பாடலை ஸ்ரீசங்கர் இயக்கியுள்ளார். இப்பாடலின் வெளியீடு தொடர்பில் ஷமீல் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது,

“அனைவருக்கும் வணக்கம்!
வரும் 30ம் திகதி சனிக்கிழமை மாலை 7 மணிக்கு,
TrendMusic South #Youtube தளத்தில் வெளியாகவிருக்கும் எமது “தீரா காதல்” காணொளிப்பாடலை, இளைஞர்களின் மனதில் தனக்கான இடத்தை பதித்துவரும், “பப்பி” மற்றும் இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனனின், வெளிவரவிருக்கும் ” Joshua இமை போல் காக்க” திரைப்படத்தின் கதாநாயகனுமான “வெற்றி நாயகன்” Varun Kamal அவர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுவைக்கவுள்ளார் என்பதை பாடற்குழு சார்பில் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

இன்னொருமொரு தளத்துக்கு செல்லும் எமது முயற்சிக்கு சகோதரத்துவம் கலந்த ஒத்துழைப்பை வழங்கும் தங்களுக்கு இலங்கை கலைஞர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். நன்றி.