இன்று வி.ஐ.பி. காட்சி – 19 முதல் திரையரங்குகளில் – “எனக்குள்ளே” படக்குழு ஊடக சந்திப்பு

508

கோடீஸ்வரன் இயக்கத்தில் டாக்டர் சுகுணன் தயாரிப்பில் உருவான “எனக்குள்ளே” திரைப்படம் இன்று (15) மாலை 5.15 மணிக்கு கல்லடி சுகந்தி திரையரங்கில் விசேட காட்சியாக திரையிடப்படுகின்றது.

இந்த விசேட காட்சிக்கான VIP ரிக்கட்களுக்கு மெசஞ்சரில் மட்டும் தொடர்பு கொள்ளவும் என தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

இதேவேளை, “எனக்குள்ளே” படக்குழுவினரின் ஊடக சந்திப்பு நேற்று மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்றுள்ளது.

இதில், Sips Cinemas உரிமையாளரும், இப்படத்தின் தயாரிப்பாளருமான வைத்திய கலாநிதி. Dr. Sukunan Gunasingam, மட்டக்களப்பின் பிரபல இயக்குநர் திரு. Kodees Waran, இசையமைப்பாளர் Kaeshanth Kulenthiran, நடிகர்கள் சார்பில் CJ Duja மற்றும் நடிகைகள் சார்பில் ஜானு முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்துடன், எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் இந்தப்படம் திரையரங்கில் திரையிடப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக சினிமாவை வளர்க்கும் எமது தளராத முயற்சியில் ஊடகங்களின் பங்களிப்பு ஒரு முக்கிய கூறாக அமைகிறது. வர்த்தக நோக்கம் மட்டுமன்றி சமூகத்திற்கான நல்ல சிந்தனைகளை விதைக்கும் வகையிலேயே எமது படைப்புகள் அமைந்திருக்கும் என்பதை மட்டக்களப்பு திரை வானில் மீண்டும் நிரூபிக்க இருக்கிறது “எனக்குள்ளே”– என படக்குழு நேற்றைய ஊடக சந்திப்பில் குறிப்பிட்டுள்ளது.