மட்டக்களப்பின் முதல் முழு நீளத்திரைப்படமான “வேட்டையன்” இணையத்தில் வெளியானது

261

மட்டக்களப்பில் எடுக்கப்பட்டு முதல் திரை கண்ட முழு நீளத்திரைப்படமான “வேட்டையன்” அண்மையில் ரசிகர்களின் பார்வைக்காக யு-ரியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

எஸ்.பரணீதரனின் “பரணி சினி காம்ப் ப்ரொடக்ஷன்” தயாரிப்பாக வெளிவந்த இத்திரைப்படத்தை எஸ்.என்.விஷ்ணுஜன் இயக்கியிருந்தார். அபிஷேக் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பை புரிந்துள்ளதுடன், அன்ட்ரூ இசையமைத்துள்ளார்.

ஆதி திரு, திவ்ய நிலா, ஜெனா ரவி, நிருஷாந்த், பிரணா, நண்பன் லோஜி, இம்ரான், கோடீஸ்வரன், கிரிஷியன் உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தார்கள்.

இந்தத் திரைப்படம் மட்டக்களப்பில் திரையிடப்பட்டு மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்ததுடன், ஏனைய இடங்களிலும் திரையிடுவதற்கான முயற்சிகளை படக்குழுவினர் மேற்கொண்டிருந்த போது, கொரோனா பேரிடர் காரணமாக அதனைச் செயற்படுத்த முடியாது போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.