விருதுகள் வென்ற சோபனின் “பற” (Fly) குறும்படம்

398

Kubrick Team தயாரிப்பாக சோபனாசிவன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் குறும்படம் “பற”. இதற்கான திரைக்கதையினை பிரசாந்துடன் இணைந்து சோபனாசிவன் எழுதியுள்ளார்.

ஹரி அனுஜித் மற்றும் கணேசன் துசிதரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தக் குறும்படத்திற்கு ரக்ஷான் லியோன் படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார்.

அக்ஷயன் மற்றும் அபிநயன் ஆகியோர் இதில் நடித்துள்ளார்கள். சமூகத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் பலர் இருக்கின்றார்கள். படிக்கும் வயதில் வேலைக்குச் செல்லும் அவர்கள் சரியாக படித்தால் இவ்வாறு கூலி வேலைகளுக்குச் செல்லத் தேவையில்லை.

பறவைக்கு சிறகுகள் இருந்தால் தான் சுதந்திரமாகப் பறக்க முடியும். அவ்வாறு எமது சுதந்திரத்திற்கான சிறகுகளை நாம் தான் தீர்மானிக்க முடியும். அது சிறுவயதில் நிச்சயம் கல்வியாக தான் இருக்க முடியும் என்ற சாரப்பட கதை நகர்கின்றது.

இது ஒரு Experimental Drama என அவர்களே குறிப்பிட்டிருக்கின்றார்கள். எனவே, படம் பார்க்கும் உங்களுக்கு இன்னும் பல விடயங்கள் தோன்றலாம். வரவேற்கத் தக்க கதை, அதை படமாக்கிய விதத்தில் சில குழப்பங்கள் பார்வையாளர்களுக்கு தோன்றலாம். முடிவை பார்வையாளர்களின் ஊகத்திற்கே படக்குழுவினர் விட்டுச் செல்கின்றனர்.

இந்தக் குறும்படம் இதுவரை சில விருது விழாக்களுக்குத் தெரிவாகியுள்ளதுடன், விருதுகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1.”Officially Selected” in Jaffna International Film Festival 2022 .

  1. Nominated For “Green Award” in Agenda 14 Short Film Festival 2022 .
  2. “Semifinalist of Best Short Film” Category In Boden International Film Festival 2021.
  3. “Officially Selected” in “Lift – Off Global Network First Time Filmmakers Sessions” 2021.
  4. Got “ Best Short Film Award ” in Art Gallery International Film Festival 2021.
  5. “Certified” in Chalana Roo Film Competition 2021.
  6. Got “ Honorable Mention In Directing & Screenwriting ” in Aguila Film Festival 2022.