2 லட்சம் பார்வையாளர்களைத் தொடும் “என் பெயரை கேளு” – இலங்கை பைலா பாடல்

553

பிரபல பைலா பாடகரான அன்டன் ரொனால்ட் தமிழில் பாடி வெளியிட்டிருக்கும் முதல் காணொளிப்பாடல் “என் பெயரை கேளு“.

அண்மையில் வெளியிடப்பட்ட இந்தப்பாடல் தற்சமயம் யு-ரியூப்பில் 2 இலட்சம் பார்வையாளர்களைத் தொடும் நிலையில் உள்ளது. இந்த வெற்றி, இலங்கை பைலா பாடல்களுக்கான மவுசு இன்னமும் மக்கள் மத்தியில் குறையவில்லை என்பதை எடுத்துக் காட்டுகின்றது.

பிரியந்த நவலகே மற்றும் கேசாந்த் குலேந்திரன் ஆகியோர் இசையமைத்திருக்கும் இந்தப்பாடலுக்கான மெலோடி வரிகளை அமைந்திருக்கின்றார் ரப் இசைப்பாடகர் விதூஷான். காணொளிப்பாடலில் அன்டன் ரொனால்ட் தோன்றி நடித்திருப்பதுடன், இப்பாடலுக்கான ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு பணிகளை தனுசாந்தன் ஹரி கவனித்துள்ளார்.

பழைய தமிழ் பைலா பாடல்களை மீளுருவாக்கும் முயற்சியில் அன்டன் ரொனால்ட் இறங்கியிருப்பதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன.

Sung by : Anton Ronald
Music by : Priyantha nawalage | Keshanth kulenthiran
Melody composed & Lyrics by : Vidushaan
Dop & edit by : Thanuchanthan Hari
Cast : Piyuni sakunika, Jessica alwis ,Nethmi sathsarani, Randi perera, Harin johny
Dance by : Cool step dance academy
Danced by : bboy lasper , Amaya nanayakara
Choreographed by : pramod sandesh