சூர்யாவின் பொன்மகள் இணையத்தில் வந்தாள்!

357

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. அறிமுக இயக்குனர் ஜெ.ஜெ.பெட்ரிக் எழுதி இயக்கி உள்ளார்.

ஜோதிகா இப்படத்தில் வழக்கறிஞராக நடித்துள்ளார். மேலும் பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன், தியாகராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ’96’ பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் இப்படத்தை நேரடியாக OTT தளத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர். அதன்படி மே 29 (நேற்று) படம் வெளியிடப்பட்டது.

OTT இல் படத்தை வெளியிட்டமை தொடர்பில் தயாரிப்பாளர் நடிகர், சூர்யா தெரிவிக்கும் போது, ‘திரையரங்குகளில் கிடைக்கும் ஆரவாரத்துக்கும் கொண்டாட்டத்துக்கும் ஈடே கிடையாது. அதேசமயம் தொழில்நுட்ப வளர்ச்சியை நம்மால் தள்ளி வைக்க முடியாது’ எனக்கூறியுள்ளார்.

இதேவேளை, பட வெளியீட்டு தினத்திலேயே களவாக சில இணையங்களிலும் இப்படம் ரிலீஸாகி தயாரிப்பாளருக்கு கலக்கத்தை உண்டு பண்ணியுள்ளதுடன், இவ்வாறு எதிர்காலத்தில் OTT இல் படம் வெளியிட நினைத்துள்ள தயாரிப்பாளர்களுக்கும் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.