ஜதார்த்தத்தை பேசும் அஜய்யின் “காரிருள்” குறும்படம்

215

சிலோன் பிக்சர்ஸ் வெளியீடாக சசி மற்றும் நவலோஜினி ஆகியோரின் தயாரிப்பில் வெளிவந்துள்ள குறும்படம் “காரிருள்”. இதனை அஜய் ஸ்ரீ இயக்கியுள்ளார்.

அலெக்ஸ் கோபியின் ஒளிப்பதிவில் உருவான இக்குறும்படத்திற்கான படத்தொகுப்பினை தமிழ் மேற்கொண்டுள்ளதுடன், ஜெயந்தன் விக்கி இசையமைத்துள்ளார்.

அஜய் ஸ்ரீ, ஜெனிபர் ஷாரா, ஊரெழு பகி, கௌரிசங்கர், அபிஷான் மற்றும் கனிஷ்டன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்தக்காலத்துல இப்பிடியும் நடக்குதா? என்று ஆச்சரியப்படத் தேவையில்லை. இப்பிடியும் நடக்குது என்பது தான் ஜதார்த்தம். இது எந்தக்காலத்தில் மாறுமோ? என்ற கேள்வியை விதைத்து சென்றிருக்கின்றது காரிருள் குறும்படம். பேச வேண்டிய கதை. அந்த வகையில் இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.