ரிச்சார்ட் பிற்போடப்பட்டது; எனக்குள்ளே, சுகந்தி, எழில் திரையிடப்படுகின்றன!

427

யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் அண்மையில் திரையிடப்பட்டு மிகுந்த வரவேற்பைப் பெற்ற சில குறும்படங்கள் இந்த வார இறுதியில் மீளவும் திரையிட ஏற்பாடாகியிருந்தது. இந்நிலையில், ரிச்சார்ட் படத்திரையிடல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக RICHARD திரைப்படத்தின் April 3ம் திகதி காட்சி (செங்கலடி செல்லம்) April 10ம் திகதி காட்சி ( EROS கொழும்பு ) ஆகியன மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது. அசௌகரியங்களுக்கு வருந்துகிறோம். – எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கோடீஸ்வரன் இயக்கத்தில் உருவான எனக்குள்ளே படம் எதிர்வரும் சித்திரை மாதம் 2ம், 3ம் திகதிகளில் மாலை 5:15 க்கு செங்கலடி செல்லம் பிரிமியர், கல்லடி சாந்தி திரையரங்குகளில் திரையிடப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதேபோன்று, எழில் மற்றும் சுகந்தி குறும்படங்கள் ஏ.ஆர்.சி. மொபைல் அனுசரணையில் மீளவும் காட்சிப்படுத்தப்படவுள்ளதாக, அதன் இயக்குனர் விமல்ராஜ் அறிவித்துள்ளார்.

யார் இந்த “எழில், சுகந்தி” இக்குறுந்திரைப்படங்களை பார்க்க வேண்டுமா? வருகின்ற ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00மணிக்கு ராஜா திரையரங்கிற்கு அனைவரையும் அன்பாேடு அழைக்கின்றாேம். இப்படங்கள் பலரைச் சென்றடைய முடிந்தவரை உங்கள் முகப்புத்தகங்களில் பகிர்ந்து ஆதரவளியுங்கள்.