எங்களுக்கென்றோர் சினிமா தேடும் பயணம் – இயக்குனர் மதிசுதாவின் ஆசை!

287

சினிமாவை அறிவதற்கு பணம் கூடத் தேவை இல்லை. அதற்கு முதல் தேவைப்படுவது தேடலும், ஆர்வமும், எதையும் எவரிடமும் கற்க வேண்டும் என்ற வேட்கையும் தான் – இயக்குனர் மதிசுதா.

ஈழ சினிமாவின் முன்னணி இயக்குனரான மதிசுதா, தான் சினிமாவுக்குள் நுழைந்து 10 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு தான் கற்றவற்றையும் பெற்றவற்றையும் சக படைப்பாளிகளுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் “எங்களுக்கென்றோர் சினிமா தேடும் பயணம்” என்ற கருத்துப் பகிர்வு நிகழ்வை (சினிமா பட்டறை) முன்னெடுத்து வருகின்றார்.

ஆர்வம் உள்ள தனி நபர்கள் அமைப்புக்கள் உங்கள் ஊர்களிலும் இவ்வாறான கருத்துப் பகிர்வு நிகழ்வை ஒழுங்கமைக்கலாம். இது சினிமா உருவாக்குனர்கள் மற்றும் சினிமா ரசனையாளர்களுக்கானது. எனவே, இந்த தகவலை உங்களுக்கு தெரிந்தவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். இயக்குனர் மதிசுதாவின் தொடர்பு இலக்கம் 0773481379.