‘மாஸ்டர்’ ட்ரெயிலர் குறித்து மாளவிகா மோகனன் அப்டேட்!

307

‘தளபதி’ விஜய் மற்றும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘மாஸ்டர்’.

இப்படம் வெளியீட்டுக்குத் தயாராகிய போது ‘கொரோனா’ சிக்கல் எழுந்ததால், அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டன. படவெளியீடும் காலவரையறையின்றி தள்ளி வைக்கப்பட்டது.

இந்தியாவின் 4 ஆம் கட்ட ஊரடங்கு தற்சமயம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், திரையரங்குகளை இன்னும் 2 மாதங்களுக்கு திறப்பது சாத்தியமில்லை என்பதாக பேசப்படுகிறது.
இந்நிலையில், படத்தின் ‘ட்ரெயிலர்’ எப்போது? வரும் என்ற கேள்வியே விஜய் ரசிகர்களுக்கு மேலோங்கி உள்ளது. விஜய்யின் பிறந்த தினமான ஜூன் 22 ஆம் திகதி புதிய ‘அப்டேட்’ கிடைக்கும் என ரசிகர்கள் காத்திருக்கின்றார்கள்.

‘ட்ரெயிலர்’ குறித்து கருத்து வெளியிட்டுள்ள படத்தின் நாயகி மாளவிகா மோகனன், ட்ரெயிலரை இசை வெளியீடன்று பார்த்ததாகவும், மிகவும் சிலிர்ப்பாக இருப்பதாகவும் கூறியுள்ளார். ஏற்கனவே, படக்குழு சார்ந்த பலரும் ட்ரெயிலரை ‘வேற லெவல்’ என புகழ்ந்து வரும் நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இன்னும் மேலோங்கியுள்ளது.