90 களின் வசந்தங்களை மீட்கும் குவேந்திரனின் “90” பாடல்

112

90s கிட்ஸ்ஸூக்கு மட்டுமல்லாமல் அனைவருக்குமே பிடித்தமான ஒரு காலப்பகுதி என்றால் அது 1990 களாக இருக்கும். டிஜிட்டல் யுகத்துக்குள் முழுவதுமாக நுழையாத அந்தக் காலப்பகுதி பொற்காலம்.

அதுவும் இலங்கையில் 80 களில் ஆரம்பித்த ஆயுத விடுதலைப் போராட்டம் வீறு கொண்டெழுந்த காலப்பகுதி 90 கள். ஒரு பக்கம் போர் என்றாலும் மறுபக்கம் அன்றைய வாழ்க்கை முறை மகத்தானது.

அந்த வாழ்க்கை முறையில் மனது மறக்காத சில பக்கங்களை தனது வரிகளில் வடித்திருக்கின்றார் பாடலாசிரியர் குவேந்திரன். அதற்கு அழகாக இசையமைத்துப் பாடியுள்ளார் ஜெயந்தன் விக்கி.

இதில் இன்னமும் பாராட்ட வேண்டியவர்கள் என்றால், பாடலில் வரும் அழகான ஓவியங்களுக்குச் சொந்தக் காரரான சுபாஸ்கரன் மற்றும் சஞ்சயன். அந்த ஓவியங்களை இன்னும் அழகாக்கியிருக்கின்றார் படத்தொகுப்பாளர் கெமல். ஓவியங்களை வைத்து அனிமேஷன் காட்சிகளை அமைத்தமை புத்திசாலித்தனம்.

இந்தப் பாடலை ஒரு முறை கேட்டுப்பாருங்கள் நிச்சயம் உங்கள் வாழ்வின் வசந்தங்களை நுகர்ந்த காலப்பகுதிக்கு உங்களை அழைத்துச் செல்லும்.

Lyrics: Kuventhiran K (Kuve)
Vocal: Jeyanthan wicky
Composed by Jeyanthan Wicky
Editor: SS Kemal
Art : Sabaskaran & Sansayan