ராப் இசையில் பக்திப்பாடலா? – கோணமலையானுக்காக புதுமை நிகழ்த்திய சிவி லக்ஸ்!

372

இலங்கையின் கிழக்கே இயற்கை எழில் கொஞ்சும் அலைகடலின் நடுவே பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றாகிய, “குரைகடல் ஓதம் நித்திலங் கொழிக்கும் கோணமா மலையமர்ந்தாரே…” என்று திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட
திருக்கோணேஸ்வர பெருமானுக்கு சிவி லக்ஸ் குழுவினர் ஒரு பாடலை அர்ப்பணம் செய்துள்ளனர்.

Swasthic FineArts தயாரிப்பில் வெளிவந்துள்ள இந்தப்பாடலுக்கு சிவி லக்ஸ் இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை தேனுஜா சந்திரன் எழுதியுள்ளார். சொல்லிசை வரிகளை சிவி லக்ஸ் மற்றும் சிறி நிரோ ஆகியோர் எழுதியுள்ளனர். ஷமீலின் ஒலிக்கலவையில் உருவான பாடலை சிவி லக்ஸூடன் இணைந்து சிறி நிரோ மற்றும் அபிமன்யா ஆகியோர் பாடியுள்ளனர்.

காணொளிப்பாடலாக வெளிவந்துள்ள இந்தப்பாடலுக்கான ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பை தர்ஷான் ஜெனா கவனித்துள்ளார்.

பாடல் குறித்து இசையைமைப்பாளர் சிவி லக்ஸ் தனது பேஸ்புக் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார், “எனது இசை பயணத்தில் சிவனுக்காக ஒரு பாடலை எனது பாணியில் படைக்க வேண்டும் என்ற நீண்ட நாட்கள் மனதில் எண்ணத்தில் மட்டும் இருந்ததை தற்போது ஒரு காணொளிப் பாடலாக வெளியிட துணை புரிந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

பாடலை கேட்டவுடன் தாமே முன்வந்து Swasthic FineArts சார்பில் தயாரிப்பு செலவுகளை பொறுப்பேற்று தமது மாணவர்களின் பங்குபற்றுதலுடன் இந்த பாடலை வெளியிட உதவி புரிந்த குரு Swasthic Geethanjali அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

Special Thanks – Sachu Satheesh Thivyaraj Thivyan Arjun Shanmugalingam Mithun Varan மற்றும்
ஆலய பரிபாலன சபையினர்”.

கடவுளுக்காக உருவாகும் பக்தி இசைக் கீதங்கள் பெரும்பாலும் கர்நாடக இசையைத் தழுவியே உருவாகுவது வழக்கம். அப்படி இருக்கையில் சிவி லக்ஸ் சொல்லிசை (ராப்) கொண்டு புதுமை படைத்திருக்கின்றார் என்று தான் கூற வேண்டும். பாடலும் அது படமாக்கப்பட்ட விதமும் அட்டகாசமாக இருக்கின்றது.

Music – Cv laksh
Singers – Cv laksh , Sri Niro , N. Abimanya
Lyrics – J.Thenuja
Rap Lyrics – Cv laksh , Sri Niro
Additional Key works – Bonifus
Mixed & Mastered – Shameel Jm
Choreography – Geethanjali Sutharshan
DOP & Editing – Thaarshan Jena
Dancers – Thakshayini Kamalanathan , Sivakumar Krushi Yadushika
Makeup – S.Sulakshana