இந்த நாட்டை இப்ப வைச்சிருக்கிறது யாரு? – உமாகரனின் “கரகாட்டக்காரன் 2.0” பாடல்

776

நாட்டு நடப்புக்களை தனது பாடலூடு நாசூக்காகத் தரும் பாடலாசிரியர் உமாகரன் ராசையாவின் மற்றுமொரு படைப்பு “கரகாட்டக்காரன் 2.0”.

தம்பி புரொடக்ஷன் தயாரிப்பாக வெற்றி விநாயகர் வழங்கியுள்ள இந்தப்பாடல் தற்கால நாட்டு நிலைமையை விவரிப்பதாக கலகலப்பாக அமைந்துள்ளது. “புட்டுப்பாட்டு” தந்த கூட்டணியில் பலர் இப்பாடலிலும் இணைந்திருப்பதால் எதிர்பார்ப்பும் கொஞ்சம் அதிகம் தான்.

ரமணன் மற்றும் வாகீசன் இராசையா ஆகியோர் பாடியிருக்கும் இந்தப்பாடலுக்கான இசை பத்மயன். காணொளிப்பாடலாக வெளிவந்துள்ள இப்பாடலுக்கான ஒளிப்பதிவு ஏ.கே.கமல், படத்தொகுப்பு பிரணவராஜ். திரையில் ஊரெழு பகி மற்றும் அட்விக் உதய்குமார் ஆகியோர் தோன்றியிருப்பதுடன், பாடலுக்கான நடனத்தை ஊரெழு பகி அமைந்துள்ளார்.

விலையேற்றம், எரிபொருள், எரிவாயு தட்டுப்பாடு உள்ளிட்ட சம கால நாட்டுப்பிரச்சனைகளை தனது வரிகளூடு வெளிப்படுத்தியிருக்கும் உமாகரன், இந்திய – இலங்கை மீனவர் பிரச்சனை, 10 தமிழ்க்கட்சிகளின் கூட்டங்கள் குறித்தும் நாசூக்காக அரசியல் பேசியுள்ளார்.

கடைசில நம்ம நாட்டு நிலைமையும் சொப்பன சுந்தரிட கார் நிலைமையாடிச்சு எண்டு சொல்லிப்போட்டாரே…