அற்புதமான காட்சிக்கவ்வல்கள்.. கவிதை போல் ஒரு பாடல் “யாசகனே”

453

Vahin entertainment தயாரிப்பாக அருட்செல்வம் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் காணொளிப்பாடல் “யாசகனே”. இந்தப்பாடலுக்கான இசையை முன்னணி இசையமைப்பாளர் சகிஷ்ணா சேவியர் அமைத்துள்ளார். பாடலை தென்னிந்திய பின்னணிப்பாடகர்களான ஹரிச்சரன் மற்றும் ஸ்ரீநிஷா ஆகியோர் பாடியுள்ளனர்.

காணொளிப்பாடலில் ரூபன், ஷர்மி மற்றும் கிரிஷ்டினா ஆகியோர் நடித்துள்ளனர். அழகாக பாடல் வரிகளை எழுதியுள்ளதுடன், ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு பணிகளையும் அருட்செல்வமே கவனித்துள்ளார். அவர் எண்ணத்துக்கு அமைய ஒவ்வொரு விடயங்களையும் ரசித்து ருசித்து செதுக்கியுள்ளார்.

நமக்கு பிடிச்ச வாழ்க்கை அமையாவிட்டாலும், அமைந்த வாழ்க்கை பிடித்ததாக மாறும் போது அதன் சந்தோஷமே தனி தானே! அப்படி ஒரு காதல் கதையை திரைக்கதையாக்கி அதை அழகுற காணொளியாக்கியுள்ளார் அருட்செல்வம். ரூபன் மற்றும் ஷர்மியின் நடிப்பும் ஜதார்த்தம் கெடாமல் அழகுற அமைந்துள்ளது.

Music composed and arranged by – Sagishna Xavier
Lyrics – Arulsellvam
Singers – Haricharan and Srinisha Jayaseelan
Veenai- Haritha
Flute – Ramesh
Mixed by – Kibi
Mastered by – Lakshman Chandrasekaran

Concept , Direction , Cinematography & Edit – Arulsellvam
Production manager : Vijay Vettri In
Lighting Director : Angelus Vibagar
Makeup and hair : Yashodara Mihirani
Costume : Christina Grace
Art Director : Vanisha Sherly
Assistant Director : Naresh Nagendran
DI – Thanush COPILOT
VFX – KS Group – VFX and motion Graphics
Voice – Christina Grace & Sri Jeyanthan Ragavan