பொத்துவில் அஸ்மின், சமீல், TR கூட்டணியில் “நாங்க வாழணுமா சாகணுமா சொல்லுங்க…” பாடல்

297

தமிழ் சினிமாவில் தடம்பதித்துள்ள இலங்கையின் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜே.சமீல் மற்றும் ”நான்” திரைப்பட புகழ் பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் (இலங்கையின் தேசிய விருது பெற்றவர்) ஆகியோர் ஒன்றிணைந்து இலங்கையின் நடப்பு நிலை பற்றி பாடலொன்றைத் தயாரித்திருக்கின்றார்கள்.

இந்தப் பாடலை கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, தயாரிப்பு, இயக்கம், நடிப்பு என பல துறைகளிலும் முத்திரை பதித்த மூத்த கலைஞர் மரியாதைக்குரிய T.ராஜேந்தர் அவர்கள் பாடியுள்ளார். இதன் வெளியீடு சென்னையில் இன்று சிறப்பாக இடம்பெற்றது.

இது குறித்து பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் தனது பேஸ்புக் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பாடலில் துணை நிற்கும், தமிழ் சினிமா ஒளிப்பதிவாளர் நண்பர், எஸ்.சக்திவேல் மற்றும் “சுந்தரபாண்டியன்”,”இது கதிர்வேலன் காதல்”, “கொம்புவச்ச சிங்கம்” போன்ற படங்களின் செம்மையாக்குனர் (EDITOR) நண்பர் V.டான் போஸ்கோ, V.வேல், சப்னா தெளபீக் , சரோ சமீல் ஆகியோருக்கும் எனது வேண்டுகோளை ஏற்று ,எந்த எதிர்பார்ப்பும் இன்றி, இலங்கை தமிழர்கள் மீதான ஆழ்ந்த அன்போடு பாடலைப் பாடித் தந்தமைக்கு மரியாதைக்குரிய கலைஞர் T.ராஜேந்தர் அவர்களுக்கும் இதயம் நிறைந்த நன்றிகள்.