சுதர்சன் இசையில் ஆட்டம் போட வைக்கும் ‘Why Baby’ பாடல்

430

எஸ்.வி.எஸ். புரொடக்ஷன் பெருமையுடன் வழங்கியுள்ள பாடல் ‘Why Baby’. சுதர்சன் (கனடா) இசையில் உருவாகியுள்ள இந்தப்பாடலை சுப்பர் சிங்கர் புகழ் சாய்சரண் பாடியுள்ளார். பாடல் வரிகளை கே.எஸ்.சாந்தகுமார் எழுதியுள்ளார்.

காணொளிப்பாடலாக வெளிவந்துள்ள இந்தப்பாடலை சசிகரன் யோ இயக்கியுள்ளதுடன், அவரின் yts studios pictures ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளது. பாடலுக்கான கலக்கல் நடனத்தை ஊரெழு பகி அமைத்துள்ளார்.

அஜய் மற்றும் ஷாஷா ஷெரீன் ஆகியோர் பிரதான பாத்திரங்களாக நடித்துள்ளதுடன், மேலும் பல நடனக்கலைஞர்கள் பங்கேற்ற இந்த பாடலுக்கான கலை இயக்கம் டாரியன்.

வழமையான காதல் தோல்வி பாடல் என்றாலும் நம்மவர்கள் அதை தங்கள் ஸ்டைலில் கலக்கியுள்ளார்கள்.