துஷிகரன் இயக்கத்தில் வித்தியாசமான காட்சி அமைப்புக்களுடன் “நரிக்கூட்டம்” பாடல்

147

TAMIL CREATORS சார்பில் ஐங்கரன் கதிர்காமநாதன் தயாரிப்பில் துஷிகரனின் திரைக்கதை, இயக்கத்தில் வெளியாகியுள்ள பாடல் “நரிக்கூட்டம்”.

இந்தப்பாடலுக்கு ஜொனா இசையமைத்துள்ளதுடன், விகடகவி வரிகளை எழுதியுள்ளார். தரு பாடியுள்ளார்.

வித்தியாசமான காட்சியமைப்புக்களுடன் உருவாகியிருக்கும் இந்தப்பாடலின் ஒளிப்பதிவாளரும் துஷிகரன் தான். படத்தொகுப்பு திலீப் லோகநாதன்.

தரு, வட்ஸூ, மொரிஸ், காந்தா, மல்கின், கோகுலன், அஞ்சலி, ஐஸ்வர்யா, சந்தியா ஆகியோர் பாடலில் தோன்றி நடித்திருக்கின்றனர்.

நாங்கெல்லாம் சிறுவயதில படித்த ”பாட்டி சுட்ட வடை” கதையில் வரும் நரியின் தந்திரத்தையும், காகத்தின் ஏமாளித்தனத்தையும் வைத்து, ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பாடம் எடுத்திருக்கின்றது இந்த பாடல் குழு. புதுமையான சிந்தனை, வித்தியாசமான காட்சிப்படுத்தல் என ஒட்டுமொத்த டீமும் கடுமையாக உழைத்திருப்பது பாடலைப்பார்க்கும் போது தெரிகின்றது.