“கபடி” டீசரில் மாஸ் காட்டிய ராதேயன்!

99

எம்மவர் படைப்புக்களின் Quantity மட்டுமல்ல Quality உம் அதிகரித்துக் கொண்டே செல்வது எமக்கெல்லாம் பெருமை தரக்கூடிய விடயம். அப்படி பெருமைமிகு படைப்பாக “கபடி” உருவாகி வருகின்றது என்பதை அதன் டீசரைப் பார்க்கும் போதே புரிகின்றது.

மட்டக்களப்பைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர், இயக்குனர் ராதேயன் ஞானப்பிரகாசத்தின் இயக்கத்தில் உருவாகிவரும் காணொளிப்பாடல் “கபடி”. நம்மவர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான கபடியை மையப்படுத்தி அவர் இந்தப்பாடலை எடுத்துள்ளதுடன், அதில் மண்ணின் நிஜ வீரர்களையே நடிக்க வைத்தும் இருக்கின்றார்.

இந்தப்பாடலுக்கான இசையை கே.கே. அமைத்துள்ளதுடன், வித்தகன் – கோவிதா ஆகியோர் பாடியுள்ளனர். வில்லியம் தர்மேந்திரா இதனைத் தயாரித்துள்ளார்.

அண்மையில் இதன் டீசர் வெளியாகியுள்ளது. அதனைப் பார்க்கும் போதே பாடலுக்காக எவ்வளவு மினைக்கெட்டிருக்கின்றார்கள் என்பதை உணர முடிகின்றது. பாடல் ஒளிப்பதிவு இயக்கம் எல்லாமே அசத்தலாக உள்ளது.

இலங்கை கபடி தேசிய அணியில் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த பல வீரர்கள் இடம்பெற்றிருப்பதுடன், சர்வதேச மட்ட போட்டிகளில் ஆடி வருகின்றனர். அதில் மட்டக்களப்பு மண்ணைச் சேர்ந்தவர்களின் பங்கும் அளப்பரியது. எனவே, அவர்களைக் கௌரவிக்கும், உற்சாகப்படுத்தும் வகையில் இந்தப்பாடல் அமையும் என்பதில் ஐயமில்லை. வாழ்த்துக்கள் பாடல் குழுவினருக்கு..