பூர்விகாவின் மாறுபட்ட நடிப்பில் “யோகினி” – டீசர் வெளியீடு

829

‘றிஸ்வான் என்டர்டெயின்மன்ட்“ தயாரிப்பில் க்ரிஷ் நலனி இயக்கத்தில் உருவாகிவரும் குறும்படம் “யோகினி“. இதன் முதற்பார்வை, மகளிர் தினமன்று வெளியீடு செய்யப்பட்டது. இந்நிலையில் அதன் டீசரும் அண்மையில் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், மெருகூட்டப்பட்ட டீசர் இன்று யு-ரியூப்பில் வெளியாகியுள்ளது. டீசர், படம் குறித்தான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. பூர்விகா மாறுபட்ட வேடங்களில் நடித்திருப்பது புலனாகின்றது. இசை குறும்படத்திற்கு பெரும் பலமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

இப்படத்தில் பூர்விகா ராசசிங்கம், ஷ்யாம்ராஜ், பிராசாந்தனி, ரொபின்சா, டினேஸ் டி.கே, பேபி ஓவியா, பேபி லகித்தி ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு ஜனா RJ, படத்தொகுப்பு ஸம்பத் ரூபன், இசை ஷமீல் J, ஒப்பனை சிந்து, போஸ்டர் வடிவமைப்பு TN சதீஸ், உதவி இயக்குனர் AK சந்துரு, தயாரிப்பு நிர்வாகம் பிரகாஸ்.