ஒரு மில்லியன் பார்வையாளர்களைத் தாண்டிய ‘Bullettu Bandi’ யாழ்ப்பாணத்து வேர்ஷன்

382

Mohana Bhogaraju என்ற பாடகியினால் தெலுங்கில் வெளியிடப்பட்ட பாடல் Bullettu Bandi. இது பட்டிதொட்டியெல்லாம் ஹிட்டடிக்கவே அதற்கு ஏகப்பட்ட Cover Versions வெளியிடப்பட்டுள்ளன.

அப்படி யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியிடப்பட்ட “புள்ளட்டு வண்டி” பாடல் இப்பொழுது யு-ரியூப்பில் ஒரு மில்லியன் பார்வையாளர்கள் என்ற இலக்கை அடைந்திருக்கின்றது.

இந்தப்பாடலுக்கான இசையை மீளமைத்திருக்கின்றார் ரிவின் பிரசாத். திலீஸின் கலக்கல் வரிகளில் உருவான இந்தப்பாடலை நடிகை, பாடகி ஷாஷா ஷெரீன் பாடியுள்ளார். தமிழ் கிரியேட்டர்ஸ் தளம் இதனை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் இருந்து வெளியிடப்படும் யு-ரியூப் தமிழ் வீடியோக்கள் ஒரு லட்சம் என்ற அடைவைத் தாண்டுவதே பெரும் பாடாக இருக்கும் நிலையில், ஒரு மில்லியன் பார்வைகள் எனும் அடைவு மிகப்பெரும் வெற்றியே!. இந்த வெற்றிக்கு காரணமாக பாடல் குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

LYRICS | THILEES
VOCAL | SHASHA SHERIN
MUSIC ARRANGEMENT, MIX DOWN | RWIN PRASATH
CINEMATOGRAPHY | SR.THUSIKARAN
EDIT & DI DHILIP | LOGANATHAN
PRODUCED BY AINKARAN KATHIRKAMANATHAN
PRODUTION HOUSE | TAMIL CREATORS