இந்தியாவில் படமாக்கப்பட்ட நம்மவர் பாடல் “உன் நினைவுகளில்”

535

ஈழத்து இயக்குனர் ஜெனோசன் ராஜேஸ்வரை உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும். இலங்கையைத் தாண்டி தென்னிந்தியாவிலும் உதவி இயக்குனராக சில படங்களில் பணி புரிந்துள்ளார். (மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்)

அவரது இயக்கத்தில் தென்னிந்தியாவில் படமாக்கப்பட்ட “உன் நினைவுகளில்” பாடல் இன்று (21) வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பாடலை படைப்பாளிகள் உலகம் ஐங்கரன் கதிர்காமநாதன் தயாரித்துள்ளதுடன் தமிழ் கிரியேட்டர்ஸ் வெளியிட்டுள்ளது.

தீசன் இசையில் உருவான இந்தப்பாடலை “குட்டி பட்டாஸ்” புகழ் ஏ.பா.ராஜா எழுதியுள்ளதுடன், தீசனே பாடியுள்ளார். முகேஷ் ரவி மற்றும் பிரீத்தி குமாரி ஆகியோர் நடித்துள்ளனர். பாடலுக்கான ஒளிப்பதிவினை இலங்கேயன் பிக்சர்ஸ் ரெஜி செல்வராசா மேற்கொண்டுள்ளதுடன், படத்தொகுப்பினை இளங்கோவன் செய்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் ரெஜி செல்வராசாவும் தென்னிந்தியாவில் உதவி ஒளிப்பதிவாளராக காலூன்றியுள்ள நிலையில், ஜெனோசனுடன் இணைந்து இப்பாடலில் பணிபுரிந்துள்ளார். முழுக்க முழுக்க இந்தியாவில் படமாக்கப்பட்ட இப்பாடலின் ஒளிப்பதிவு, இசை எல்லாமே அருமையாக அமைந்துள்ளது.

Composed & Arranged By Theeson
Featuring – Mukesh Ravi & Preeti Kumari
Vocal By – Theeson
Lyrics – A.PA.Raja
Directed By – Jenosan Rajeswar
Director Of Photography – Reji Selvarasa
Set – Thamizh | H.M.Raja
Editing – CM.Elangovan
DI – Vinayganesh
Costumes – Sudharshan Raveendran
Stills – H.M.Raja
PRO – Nikkil Murugan