VANNI RAP – வன்னியின் புகழை தமிழர் நாம் கூற வேண்டும்!

434

பரிஸ்ராஜ் தயாரிப்பில் கதிரின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் பாடல் “VANNI RAP”. தமிழின் பெருமையையும் வன்னியின் சிறப்பையும் கூறும் வகையில் இந்தப்பாடலை அமைந்திருப்பதுடன், Woodpecker யு-ரியூப் பக்கத்தில் இது வெளியிடப்பட்டுள்ளது.

வருணின் இசையில் உருவான இந்தப்பாடலை எல்.கே.குட்டி எழுதிப்பாடியுள்ளார். டி.கே.கார்த்திக், எல்.கே.குட்டி, ஜசிந்தன், பானு, சாரு ஆகியோர் இதில் நடித்துள்ளனர்.

“ராப்“ பாடல் என்பதால் பாடல் முழுவதுமே பரபரப்பாக இருக்கின்றது. இதனை சிறந்த முறையில் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு செய்துள்ளார் இயக்குனர் கதிர். குறிப்பாக “ஏரியல் வியூ“ காட்சிகளில் நல்லூர் வரவேற்பு, யாழ். கோட்டை, நூலகம் என்பன அசத்தலாக இருக்கின்றன.