குழந்தைகளின் இயல்பான வாழ்க்கையைச் சித்தரிக்கும் “தொட்டி மீன்கள்” குறும்படம்!

638

”முடக்க காலத்தில் குழந்தைகள்“ (Children in Lockdown) என்ற எண்ணக்கருவுக்கு அமைய மணிவாணன் இயக்கத்தில் வெளிவந்துள்ள அழகிய குறும்படம் “தொட்டி மீன்கள்”.

பெயருக்கு ஏற்றது போலவே முடக்க காலத்தில் தொடர்மாடி குடியிருப்பில் சிறைப்பட்ட சிறார்களின் வாழ்க்கை முறையை சித்தரிப்பதாக இக்குறும்படம் அமைந்திருக்கின்றது.

குழந்தைகளின் உலகம் தனியானது. அந்த உலகத்துக்குள் குழந்தைகளுடன் குழந்தைகளாக மாறி வாழ வேண்டிய தேவை பெரியவர்களுக்கு உண்டு. அந்தக்காலத்தில் தாத்தா, பாட்டி என்ற கூட்டுக்குடும்ப முறை இதற்கெல்லாம் பெரிதும் அனுகூலம். இன்றும் தாத்தா, பாட்டியுடன் வாழக்கிடைக்கும் குழந்தைகள் பாக்கியம் செய்தவர்கள்.

மாறி வரும் உலகம், இயந்திர வாழ்க்கை, தனிக்குடித்தன முறைமை, நகர தொடர்மாடி குடியிருப்பு வாழ்க்கை… இவையெல்லாம் குழந்தைகளைத் தான் அதிகம் பாதிக்கின்றது. தாய், தந்தையுடன் தனது நேரத்தை ஒழுங்காக செலவிட முடியாத பெண் குழந்தையை மையமாக வைத்து இயக்குனர் மணிவாணன் இந்தக்குறும்படத்தை இயக்கியுள்ளார்.

தான் சொல்ல வந்த சேதியை தெளிவாகவும், அழகாகவும் சொல்லியுள்ளார். குழந்தைகளின் நடிப்பும் இயல்பாக உள்ளது. மிகைப்படுத்தாமல் ஒரு குடும்ப வாழ்க்கை முறையை படம்பிடித்துள்ளார் இயக்குனர்.

இக்குறும்படத்தில் நவயுகா, கேதீஸ்வரன், ஆரண்யா, அக்ஷயன் ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு சானக விஜமுனிகே, படத்தொகுப்பு திலீப் லோகநாதன், இசை பத்மயன்.

Director – Manivanan
Cast – Aaranya | R.Akkshayan | Navayuga| Ketheeshwaran
DOP – Chanaka Wijamunige
Editor – Dhilip Loganathan
Music – Pathmayan Sivananthan
Sync sound – Lal dissanayake & Dinesh Ekanayake
Sound designer – Pathmayan Sivananthan
Art director – Goabi Ramanan
Makeup – Buwaneka Ranawaka
Assistant Director – Jenoshan Jayarathnam
Production Manager – Mishal Perera
Productions Assistants – Lathusan/ Krishanthi/ Sri/ Roshan
Colorist – Rishi Selvam
Funded by – Stage Theatres Group