குவியம் டிஜிட்டல் விருதுகள் 2022 – அறிவிப்பு இல. 01

845

இலங்கைத் தமிழ் சினிமா கலைஞர்களின் படைப்புக்களை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் குவியம் இணையத்தளமானது (www.kuviyam.lk) தனது முதலாவது ஆண்டு நிறைவையொட்டி கடந்த வருடம் (2021) ‘குவியம் விருதுகள்’ நிகழ்வை நடாத்த திட்டமிட்டிருந்தது. கொரோனா இடர்காலநிலையினால் அதனை திட்டமிட்டபடி நாடாத்த முடியாது போயிற்று.

இந்த வருடமும் மே மாதம் விருது நிகழ்வை நடத்த திட்டங்களை வகுத்த போதும் நாட்டில் ஏற்பட்ட திடீர் அரசியல் மற்றும் பொருளாதார நெடிக்கடி நிலைமையினால் அதனை உரிய காலப்பகுதியில் நடத்த முடிவில்லை. இந்த நெருக்கடி நிலைமை உடனடியாகத் தீர்வதற்கான ஏதுநிலைகள் காணப்படாத காரணத்தினால் விருது விழாவை காலம் தாழ்த்தாது எளிமையாக நடத்துவதற்கு நாம் தீர்மானித்துள்ளோம்.

எம் கலைஞர்களுக்கான அங்கீகாரங்களை உரிய காலப்பகுதியில் வழங்குவதே மிகப்பொருத்தமானது என நாங்கள் நம்புகின்றோம்.

இம்முறை விருது விழாவிற்கு, கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் வெளியான படைப்புக்களை எங்களுக்கு அனுப்பி வைக்க முடியும். (நிச்சயம் அவை குறித்த ஆண்டுப்பகுதியில் யு-ரியூப்பில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும்)

இது குறித்த மேலதிக அறிவிப்புக்களை (அறிவிப்பு இல. 02) இன்னும் சில தினங்களில் வெளியிட முடியும் என நம்புகின்றோம். அதுவரை காத்திருங்கள்.

‘உங்களால் உங்களுக்கான கௌரவம்’ விரைவில்..

குவியம் விருதுகள் 2022
ஏற்பாட்டுக்குழு
01.06.2022