சஞ்ஜித் லக்ஸ்மனின் “அழகாய் ஒரு மாற்றம்” பாடல் டீசர் வெளியீடு

471

நம் நாட்டின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான சஞ்ஜித் லக்ஸ்மனின் இசையில் உருவான “அழகாய் ஒரு மாற்றம்” பாடலின் டீசர் நேற்று (06) வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப்பாடலை சதீஸ்காந்த் எழுதியுள்ளதுடன் நிருஷ்கா பாய்வாவுடன் இணைந்து சஞ்ஜித் லக்ஸ்மன் பாடியுள்ளார். இவர்களுடன் ராப் பாடகர் ஸ்ரீசரணும் இணைந்துள்ளார்.

காணொளிப்பாடலில் திகு மற்றும் அமல் தோன்றி நடித்துள்ளனர். பாடலுக்கான ஒளிப்பதிவு ராதேயன், படத்தொகுப்பு அபிஷேக். நடன இயக்குனராக நரேஷ் நாகேந்திரன் பணியாற்றியுள்ளார். தயாரிப்பு மேற்பார்வையுடன் பாடலை இயக்கியுள்ளார் சஞ்ஜித் லக்ஸ்மன்.

பாடலின் புரோமோவைப் பார்க்கும் போதே புரிகின்றது இதுவொரு அழகிய காதல் பாடலாக அமையும் என்பதுடன் சஞ்ஜித் லக்ஸ்மனின் இசைப்பயணத்தில் முக்கிய பாடலாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை.