கோடீஸ்வரனின் புதிய படம் “போடியார்” – அட்டகாசமான போஸ்டர்களுடன் அறிமுகம்!

357

விஷூவல் ஆர்ட் மூவீஸ் தயாரிப்பாக கோடீஸ்வரன் இயக்கத்தில் உருவாகிவரும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நடுத்தர நீளத்திரைப்படமாக (ஒரு மணி நேரம்) உருவாகிவரும் இத்திரைப்படத்தை Dr.அருளானந்தம், சதா. சண்முகநாதன், ப.முரளிதரன் ஆகியோர் தயாரிக்கின்றனர்.

இதன் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு பணிகளை ஜி.புஸ்பகாந்த் மேற்கொண்டுள்ளதுடன், இசைப் பணிகளை AJ சங்கர்ஜன் கவனித்துள்ளார்.

விஷூவல் ஆர்ட் மூவீஸ் ப.முரளிதரன் இதன் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதியுள்ளதுடன், இணை இயக்கம் ஜனிதன், போஸ்ட்டர் வடிவமைப்பு TN சதீஸ், சிகை அலங்காரம் TK கண்ணன், கலை இயக்கம் செபஸ்டின், தயாரிப்பு மேற்பார்வை அஜித்.

ஜனா RJ, RJ நெலு, கலைமாமணி காண்டீபன், சுஜானி பீட்டர் (சுஜி), சாஷா கிரேஸ், ப.முரளிதரன், பாரதி கென்னடி, சந்திராவதி, நவரெட்ணராஜா, செபஸ்டின், அஜித், றுத்றா, தாருகேஷினி, RJ கனிஸ்றன், ஆஹிஷன், தங்கயுவன், RJ லேணுஜன், பொத்துவில் வில்லூர்பாரதி, ரா. பெனாபில்லா, நிரன், பேருஷன் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர்.

இப்படம் குறித்து தயாரிப்பு நிறுவனம் கீழ் உள்ளவாறு பதிவிட்டுள்ளது.

வர்த்தக சினிமாவை வளர்ப்பதில் எமது பங்களிப்பாக வித்தியாசமான ஒரு கதைக்களத்தில் Visual Art Movies இன் மூன்றாவது படைப்பாக விரைவில் திரையிடப்படவிருக்கும் எமது புதிய நடுத்தர நீளத் திரைப்படத்தின் (Mid-Length Movie) மூன்று போஸ்ட்டர்களை வெளியிடுவதில் நாம் பெருமையடைகின்றோம்.

போடியார் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் முழுவதுமாக மட்டக்களப்பு படுவான்கரைப் பிரதேசத்திலேயே படமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எமது சினிமாவை வர்த்தகரீதியாக வளர்ப்திலும், எமது கலைஞர்களின் திறமைக்கு அங்கீகாரம் அளிப்பதிலும் எமது முயற்சிக்கு தொடர்ந்தும் நீங்கள் தரும் ஆதரவிற்கு மிக்க நன்றி. உங்கள் ஆதரவே எமது பலம்.

விரைவில் திரையரங்கு காண இருக்கும் “போடியார்” திரைப்படத்திற்கு குவியத்தின் வாழ்த்துக்கள்.