“படைப்பாளிகள் உலகம்“ நடாத்தும் குறும்படப்போட்டி – முழு விபரம் உள்ளே!

97

படைப்பாளிகள் உலகம் நடாத்தும் களம் தேடும் படைப்பாளிகளுக்கான தளம்.

உங்கள் சிந்தனையின் காட்சிப்படிமங்களுக்கு உருவம் கொடுத்து உயிரூட்ட நீங்கள் தயாரா?

அப்படியாயின் நீங்கள் செய்யவேண்டியது. உங்கள் திறமையை நிரூபிக்கும் வகையில்
20 நிமிடங்களுக்குள் குறும்படம் ஒன்றை உருவாக்குங்கள்.

குறும்படங்கள் 08.06.2022 தொடக்கம் 08.07.2020 வரையிலான காலப்பகுதியில் உருவாக்கப்படல் வேண்டும்.

குறும்படங்கள் எந்தக் கதைக்களத்தினைக் கொண்டும் அமைக்கப்படலாம்.

இலங்கையின் எப்பாகத்திலிருந்தும் படைப்பாளிகள் பங்குபற்றலாம்.

உருவாக்கப்படும் குறும்படங்கள் ஜீலை 8ம் திகதிக்கு முன்னர் மின்னஞ்சலூடாக அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

தெரிவு செய்யப்படுகின்ற சிறந்த 03 குறும்பட குழுக்களுக்கு, 300,000 ரூபா 200,000 ரூபா 100.000 ரூபா என பணப்பரிசு வழங்கப்படும்.

அவ்வாறு தெரிவு செய்யப்படும் மேலும் சிறந்த 15 குறும்படங்களுக்கு 50,000 ரூபா பணப்பரிசு வழங்கப்படும்.

இப் படைப்புக்களில் 06 குறும்படங்கள் பெருந்திரையில் திரையிடப்படும். பின்னர்
படைப்பாளிகள் உலகம் வலைத்தளங்களில் வெளியிடப்படும்.

தெரிவாகும் குறும்படங்கள் யாவும் படைப்பாளிகள் உலகம் தளத்தில் வெளியிடப்படும்.

வலைத்தளத்தில் வெளியிடப்பட்டு 30 நாட்களில் 30000 மேல் பார்வையாளர்களை
பெறும் ஒரு படைப்பாளிக்கு மற்றுமொரு குறும்படத் தயாரிப்பிற்காக 300,000 ரூபா
வழங்கப்படவிருக்கிறது.

படைப்பு பற்றிய விபரங்களோடு தங்கள் குறும்படங்களை மின்னஞ்சல் முகவரிக்கு
அனுப்பிவையுங்கள்.

மனத்திரையின் படிமங்களை பெரும் திரையில் காண்போம்.