ட்ரென்டிங்கில் “அழகாய் ஒரு மாற்றம்“ பாடல்

817

சஞ்ஜித் லக்ஸ்மனின் இசையில் உருவான “அழகாய் ஒரு மாற்றம்” பாடல் தான் தற்போது ட்ரென்டிங்கில் இருக்கின்றது. இசை, வரிகள், குரல் என அனைத்துமே அட்டகாசமாக இருப்பதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்தப்பாடலை சதீஸ்காந்த் எழுதியுள்ளதுடன் நிருஷ்கா பாய்வாவுடன் இணைந்து சஞ்ஜித் லக்ஸ்மன் பாடியுள்ளார். இவர்களுடன் ராப் பாடகர் ஸ்ரீசரணும் இணைந்துள்ளார்.

ஸ்ரீசரணைப் பொறுத்தவரையில் “சென்னை எக்ஸ்பிரஸ்” மற்றும் “கோ” படங்களில் ரப் வரிகளைப் பாடியுள்ளதுடன், ஹரீஸ் ஜெயராஜ் மற்றும் விஜய் அன்டனி இசையில் வெளிவந்த பல பாடல்களில் ரப் வரிகளைப் பாடியிருக்கின்றார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

காணொளிப்பாடலில் திகு மற்றும் அமல் தோன்றி நடித்துள்ளனர். பாடலுக்கான ஒளிப்பதிவு ராதேயன், படத்தொகுப்பு அபிஷேக். நடன இயக்குனராக நரேஷ் நாகேந்திரன் பணியாற்றியுள்ளார். தயாரிப்பு மேற்பார்வையுடன் பாடலை இயக்கியுள்ளார் சஞ்ஜித் லக்ஸ்மன்.

அழகான காதல் பாடலை இன்னும் அழகாக்கி இருக்கின்றார் ஒளிப்பதிவாளர் ராதேயன் என்று தான் கூறவேண்டும். காட்சிக்கு காட்சி புத்துணர்வு. அந்த புத்துணர்வை திரையில் கொண்டு வந்திருக்கின்றார்கள் நிஜ ஜோடியான அமல் மற்றும் திகு.

Music Composed and Arranged by Sanjit Lucksman
Rap Sricharan Kasthurirangan
Vocals Nirushka Paaiva / Sanjit Lucksman
Tamil Lyrics by Satheeskanth
Rap Lyrics by Sricharan K
Additional Keys Sagishna Xavier
Additional Arrangements Smith Asher | Nichalean Mario
Mixing and Mastered @Sanstudio