குவியம் டிஜிட்டல் விருதுகள் 2022 – அறிவிப்பு இல. 03

159

குவியம் டிஜிட்டல் விருதுகள் 2022 தொடர்பான அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டு ஒரு வார காலத்தினுள் 50 இற்கும் மேற்பட்ட கலைஞர்களிடம் இருந்து 150 இற்கும் மேற்பட்ட படைப்புக்கள் எங்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளமை சந்தோசமே!

இன்னும் பலருக்கும் இதற்கான விண்ணப்பங்களை அனுப்புவது தொடர்பில் சில சந்தேகங்கள் இருக்கின்றன. அவை குறித்து எம்மிடம் தொலைபேசி, பேஸ்புக் பக்கம், வட்ஸ்அப் மற்றும் மின்னஞ்சல் ஊடாக கேட்கப்பட்ட சந்தேகங்களுக்கு விடையளிக்கப்பட்டுள்ளன.

அதில் பிரதானமானது, இயக்குனர் – தயாரிப்பாளர் தவிர்ந்த படைப்புடன் சம்பந்தப்பட்டவர்கள் அதனை விருது விழாவிற்கு அனுப்பலாமா? என்பது பற்றி…

தாராளமாக அனுப்பலாம்.. விண்ணப்பப்படிவத்தில் YOUR CONTRIBUTION IN THIS PROJECT AS என்கிற பகுதியில் உங்களுக்கும் படைப்புக்குமான தொடர்பைக் குறிப்பிட வேண்டும்.

அடுத்து, விண்ணப்பதாரி மட்டுமா விருது விழா போட்டியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்? என்கிற கேள்வி.

இல்லை, நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு படைப்பிலும் பணியாற்றிய அனைவரும் விருதுக்குரிய அந்தந்தப்பிரிவுகளில் பரிசீலிக்கப்படுவார்கள். ஆனால், கண்டிப்பாக எங்களுக்கு வந்து சேர்ந்த விண்ணப்பங்களில் (படைப்புக்கள்) இருந்து தான் வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படுவார்கள். எனவே, விருது விழாவுக்கு விண்ணப்பிக்க மறக்காதீர்கள்.

குவியம் டிஜிட்டல் விருதுகள் 2022 குறித்த அறிவிப்பு மற்றும் நிபந்தனைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பத்திற்கான கூகுள் போர்மை பெற இங்கே கிளிக் செய்யவும்.

விரைவில் உங்களால் உங்களுக்கான கௌரவம்!