நாடு இப்ப திருடன் கையில.. இளைஞர் எல்லாம் நாட்டை விட்டு போயாச்சே.. – அசத்தும் Rap Ceylon

225

Rap Ceylon இன் புதிய வெளியீடாக வந்திருக்கும் பாடல் “பத்தல பத்தல ரீமிக்ஸ்”. கமலின் விக்ரம் திரைப்படத்தில் வெளிவந்த பத்தல பத்தல பாடலை நம் நாட்டு நடப்புக்கு ஏற்ப வரிகளை இணைத்து ரீமிக்ஸ் செய்திருக்கிறார்கள்.

“கபுட கா கா கா..” என ஆரம்பிக்கும் பாடலில் தனது வரிகள் மூலம் ஆட்சியாளர்களைப் போட்டுத் தாக்கியிருக்கிறார் வாகீசன். கூடவே, நாட்டின் தற்போதைய நிலை பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார்.

திசோன் விஜயமோகனின் இசைக்கோர்ப்பில் உருவான இந்தப்பாடலை திசோனுடன் இணைந்து அட்விக் பாடியுள்ளார். அசத்தும் வரிகளுடன் ராப் இசைப்பாடகராக வாகீசன் ராசையா இணைந்துள்ளார். ராப் சிலோனின் முன்னைய பாடல்களைப் போலவே இந்தப்பாடலும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்காகி வருகின்றது.