நிலுக்ஷான் இசை மற்றும் இயக்கத்தில் “ஓர் வலி உயிரே” குறும்படம்

80

நிலுக்ஷான் இசையில் “சூப்பர்“ சிங்கர் புகழ் ராஜகணபதி குரலில் சில மாதங்களுக்கு முன்னர் வெளிவந்த அட்டகாசமான பாடல் “ஓர் வலி உயிரே”. இந்தப்பாடலுக்கு ஒரு கதை அமைத்து தற்சமயம் குறும்படமாக வெளியிட்டிருக்கின்றார்கள்.

காணொளிப்பாடலில் Ronstan Rony, Vidursha Vaishali, Dhakshika, Anton, Saruban, Sudhan ஆகியோர் நடித்திருக்கின்றார்கள். ரெமிநாத் அஜய் மற்றும் சேனாதிபதி ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்பாடலுக்கு ரொனி படத்தொகுப்பு செய்துள்ளார்.

SH MOVIE ENTERTAINMENT சார்பில் சுபஸ்ரீ தயாரித்திருக்கும் இந்தப்பாடலை நிலுக்ஷான் இயக்கியுள்ளார். பாடல் வரிகள் Dev Samrat.

காதல் பிரிவின் வலிகளைச் சொல்லும் அழகான வரிகளுடன் அமைந்த இந்தப்பாடலில் ரொனி மற்றும் விதுர்ஷா வைசாலியின் நடிப்பு மேலும் உயிர் கொடுக்கின்றது.