காலத்தின் கண்ணாடியாக நிதர்சனின் “நாம் மனிதர்கள்“ குறும்படம்

636

தமிழன் படைப்பகம் சார்பாக எம்.ஜே.நிதர்சனின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் குறும்படம் “நாம் மனிதர்கள்”.

கிளாரன்ஸ், அன்ரனி மற்றும் விபூசணன் ஆகியோர் நடித்திருக்கும் இக்குறும்படத்திற்கான ஒளிப்பதிவு திவர்ணன், படத்தொகுப்பு நிதர்சன். டக்ஷனாவின் கதையை திரைக்கதையாக்கி காலத்தின் கண்ணாடியாக படத்தை எடுத்திருக்கின்றார் நிதர்சன்.

இலங்கையின் அண்மைய பொருளாதார நெருக்கடியால் கடற்தொழில் உள்ளிட்ட ஒவ்வொரு தொழில்துறையும் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன என்பதை வசனங்களூடாக வெளிப்படுத்தியுள்ளதுடன், ஏழைகள் இந்த மாதிரியான நேரங்களில் உணவுக்காக எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதையும் காட்டியிருக்கின்றார்கள்.

உணவுக்கு கஷ்டப்படுபவர்களுக்கு ஒரு வேளை உணவையாவது இருப்பவர்கள் வழங்கலாம். அவர்களை “நாம் மனிதர்கள்” என்ற வகையறாக்குள் உள்ளடக்கலாம் என்ற விடயத்தையும் சொல்லிப்போகிறார் இயக்குனர்.

டப்பிங்கில் சில சில குறைகள் இருந்தாலும், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, நடிப்பு என ஏனைய விடயங்கள் கதைக்கு ஏற்ற அளவில் நன்றாகவே இருக்கின்றது. சமூகத்துக்கு ஏற்ற படைப்பை தந்த படக்குழுவிற்கு வாழ்த்துக்கள்.