தந்தையர்களுக்காய் ஒரு படைப்பு – “தாயுமானாய்” பாடல்

46

கே கே சகோ இசைக் கலையகம் தயாரிப்பில் தமிழ் கிரியேட்டர்ஸ் வெளியீடாக தந்தையர் தினத்தில் வெளிவந்துள்ள பாடல் “தாயுமானாய்”.

இந்தப்பாடலுக்கான வரிகளை வெற்றி துஷ்யந்தன் எழுதியுள்ளதுடன், சி.சுதர்சன் இசைமைத்துள்ளார். இசைமணி கே.வி.செல்வன் இதனைப்பாடியுள்ளார்.

வாகீசன், மல்கின் மற்றும் ஹரிஷ் ஆகியோர் தோன்றி நடித்திருக்கும் இந்தப்பாடலுக்கான ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு பணிகளை ஸ்ரீ துஷிகரன் மேற்கொண்டுள்ளார்.

“வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஒவ்வொரு அப்பாக்களுக்கும் சமர்ப்பணம்” என்று முடிகின்ற பாடல் எம்மக்களின் ஏக்கங்களை வெளிப்படுத்துகின்றது.